தமிழ்நாடு

ராமர் கோவில் பூமி பூஜைக்கு செல்லும் ஸ்ரீரங்கம் பிரசாதம்

DIN


திருச்சி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களில் இருந்து புனித நீர், பிரசாதம், பூஜை பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ராமரின் குல தெய்வ கோவிலாக கருதப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து பிரசாதம் எடுத்துச் செல்லப்படுகிறது. 

கோவில் சார்பில், தயாரிக்கப்பட்ட அரங்கநாதரின் பிரசாதமானது பட்டர்களால் எடுத்துவரப்பட்டு ரங்கா, ரங்கா கோவில் முன்பாக இந்து கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் வசம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்த பிரசாதத்தை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் சேர்ப்பதற்கு இந்து அமைப்பின் நிர்வாகிகள் கொண்டு செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT