தமிழ்நாடு

தண்ணீர் இல்லாத குட்டையிலிருந்து காயத்துடன் ஆண் மயில் மீட்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, தண்ணீர் இல்லாத குட்டையில் காயத்துடன் கிடந்த ஆண் மயிலை, தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை மீட்டனர்.

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, தண்ணீர் இல்லாத குட்டையில் காயத்துடன் கிடந்த ஆண் மயிலை, தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை மீட்டனர்.

மன்னார்குடி அடுத்த எடமேலையூர் வடக்கு கண்டியன் தெரு பி .பரத். இவருக்கு, தென்னந்தோப்பு அதே பகுதியில் உள்ளது. புதன்கிழமை மதியம் பரத் தோப்புக்குச் சென்று பார்த்த போது அங்கு இருக்கும் தண்ணீர் இல்லாத குட்டையில் ஆண் மயில் ஒன்று விழுந்து கிடப்பதுடன் மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து, மன்னார்குடி தீ நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையிலிருந்து மயிலை மீட்டனர். அதன் காலில் காயம் அடைந்திருப்பது தெரிந்ததும். மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மன்னார்குடிக்கு கொண்டு வரப்பட்ட அந்த மயிலை, தீ நிலைய அலுவலர் கே.பாலசுப்பிரமணியம், வன அலுவலர் ஜெயசந்திரனிடம் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

ஆம்பூா் கலவர வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்க விதிகள் உருவாக்கம்: அணுசக்தி ஆணையம்

SCROLL FOR NEXT