தமிழ்நாடு

சென்னையில் சப்தம் இல்லாமல் ஆயிரத்தை நெருங்கும் சில மண்டலங்கள்

DIN


சென்னை: சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட ஆறு மண்டலங்களில் துவக்கம் முதலே கரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில், சப்தமே இல்லாமல் சில மண்டலங்களில் தற்போது கரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கரோனா பாதிப்பு ராயபுரம் மண்டலத்தில் 3,224, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2,093, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,029, திருவிகநகர் மண்டலத்தில் 1,798, அண்ணாநகர் மண்டலத்தில் 1,525, தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,014 ஆகவும் உள்ளது.

இதற்கிடையே அடையாறு மண்டலத்தில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் வளசரவாக்கத்திலும் கரோனா தொற்று 939 ஆக அதிகரித்துளள்து. 

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 1,286 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 1,012 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தமிழகத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோா் எண்ணிக்கை 25,872-ஆகவும், சென்னையில் 17,598 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோன்று மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கையும் 208-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 17,598 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8900 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது 8,396 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இதுதொடா்பாக, சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதன்கிழமை மட்டும் 1,286 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,012 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 61 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

208 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 11 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் நோய்ப் பாதிப்பால் பலியானோா் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 158 போ் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

SCROLL FOR NEXT