தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,982 பேருக்கு தொற்று; பாதிப்பு 40 ஆயிரத்தைத் தாண்டியது!

DIN

தமிழகத்தில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 1933. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 49 பேர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,477 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மேலும் 18 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் பலியானோர் 8 பேர், அரசு மருத்துவமனையில் பலியானோர் 10 பேர். இதையடுத்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

இன்று 18,231 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,73,906 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி, கரோனா பரிசோதனைக்கு அரசு ஆய்வகங்கள் 45, தனியார் ஆய்வகங்கள் 33 என மொத்தம் 78 ஆய்வகங்கள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

SCROLL FOR NEXT