தமிழ்நாடு

திருச்சி: விபத்தில் காயமடைந்து உயிரிழந்த இளைஞருக்கு கரோனா உறுதி

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.

DIN

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம், கல்லக்குடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (25). பஞ்சர் ஒட்டும் தொழிலாளியான இவர், சாலை விபத்தில் பலத்த காயமடைந்து கடந்த 8ஆம் தேதி திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துமவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்கு, கடந்த 10ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது. 

இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மூளை வரையில் உள்ளுறுப்புகள் சிதைந்து சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்திருந்தாலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வழிகாட்டுதலின்படி பிரேதப் பரிசோதனை செய்து, உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திருச்சியில் ஏற்கெனவே 70 வயது மூதாட்டி கரோனா தொற்றுடன் சிகிச்சைக்கு வந்து கடந்த 2ஆம் தேதி உயிரிழந்தார். இதேபோல, திருவள்ளூரிலிருந்து பெரம்பலூர் வந்து தொற்று உறுதியான 53 வயது ஆண் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மூன்றாவது ஒரு உயிரிழப்பு சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT