தமிழ்நாடு

பொட்டிரெட்டிபட்டி ஏரி புனரமைப்பு பணி தொடக்கம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை காலத்தில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில் பொட்டிரெட்டிபட்டி ஏரி மற்றும் குட்டைகள் சீரமைப்பு பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி  ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  கோம்பை சாலையில்  உள்ள  ஏரி மற்றும் இரட்டை குட்டைகள் புனரமைப்பு பணியை நாமக்கல் கோட்டாட்சியர் எம். கோட்டைக்குமார் தொடக்கி வைத்தார். 

2 பொக்லைன் இயந்திரம் கொண்டு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் துளசிராமன் உபதலைவர் சுரேஷ்,  ஒன்றிய வார்டு உறுப்பினர் துரை மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

பசுமை நாமக்கல் தலைவர்  வ.சத்தியமூர்த்தி குட்டை புனரமைக்கும் பொறுப்பை ஏற்றுக்  கொண்டுள்ளார். இந்த விழாவில் பசுமை நாமக்கல் ஒருங்கிணைப்பாளர் தில்லை சிவகுமார் மற்றும் நாமக்கல் நல்லோர் வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT