தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 2,516 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 2,478, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 38.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை, 64,603ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 25,148 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 9,44,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் 39 பேர் (தனியார் -11/அரசு -28) பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 35,339 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் 28,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.