டிஜிபி, தூத்தக்குடி எஸ்.பி. ஆஜராக மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு 
தமிழ்நாடு

தந்தை - மகன் மரணம்: டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி. ஆஜராக மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு

தந்தை மகன் மரணம் அடைந்த சம்பவம் குறித்து தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்.பி.யும் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

DIN


மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் மரணம் அடைந்த சம்பவம் குறித்து தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்.பி.யும் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை -  மகன், சிறைச்சாலையில் மரணம் அடைந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் இன்று தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.

இந்த வழக்கில், தமிழக காவல்துறை டிஜிபியும் தூத்துக்குடி காவல்துறை கண்காணப்பாளரும், மதியம் 12.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அரசடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58), மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். மரக்கட்டை வியாபாரம் நடத்தி வந்தார். கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அவருக்கு திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சிறைக் காவலர்கள் அவரை காவல்நிலையத்துக்குப் பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் பலியானார்.‌ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தார். 

இதையடுத்து கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை, 3 மருத்துவா்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT