தமிழ்நாடு

காங்கயம் அருகே இந்தியன் வங்கி ஊழியருக்கு கரோனா: வங்கி மூடல்

DIN

காங்கயம் அருகே, இந்தியன் வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, சக ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் தொற்று ஏற்பட்டதால், வங்கி மூடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, கோவை சாலையில் இந்தியன் வங்கியின் காடையூர் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பணியாற்றும் காசாளருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதையடுத்து, காங்கயம்-ராம்நகரில் நகரில் குடியிருக்கும் அவர், சனிக்கிழமை பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து, அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இதே வங்கியில் காசாளராகப் பணிபுரியும் பெண்ணின் 2 வயது ஆண் குழந்தைக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவர்கள் காங்கயம் நகரில் உள்ள லட்சுமிநகர் பகுதியில் குடியிருந்து வருகின்றனர். மேலும், இதே வங்கியில் பணிபுரியும் உதவி மேலாளரின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் காங்கயம்-சக்திநகரில் வசித்து வருகின்றனர். கரோனா பாதித்த இருவரும் சிகிச்சைக்காக ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து காடையூரில் உள்ள இந்தியன் வங்கி மூடப்பட்டு, (சனி, ஞாயிறு தினங்களில் வங்கி மூடப்பட்டிருந்தது) வங்கியிலும், வங்கி முன்பும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. காங்கயம் நகராட்சி நிர்வாகம் சார்பில் காங்கயம் நகரில் உள்ள லட்சுமி நகர், சக்தி நகர்ப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT