தமிழ்நாடு

பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

DIN

பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.7.2020 முதல் 28.10.2020 வரை தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'எலெக்சன்’ வெற்றியா? - திரைவிமர்சனம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

பந்துவீச்சாளர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

SCROLL FOR NEXT