மர்மப் பெட்டி 
தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மரப்பெட்டி: போலீஸார் விசாரணை

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கியுள்ள மரப் பெட்டியை கைப்பற்றியுள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கியுள்ள மரப் பெட்டியை கைப்பற்றியுள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக் குளம் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  அதிகாலையில்  மரப் பெட்டியொன்று கரை ஒதுங்கியிருப்பது தெரிய வந்தது.

சுமார் 3 அடி நீளம், சுமார் 1 1/2 அடி அகலத்தில் காணப்படும் பெட்டியின் உள்புறம் 12 அறைகளாக உள்ளது.

இதில்,11 அறைகளில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பவுடர் போன்ற பொருள் நிரப்பப்பட்டுள்ளது.

இந்த பொருள் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

பெட்டியை கைப்பற்றியுள்ள போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT