தமிழ்நாடு

கரோனா எதிரொலி: சென்னை துறைமுகத்துக்குள் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய தடை

DIN


சென்னை: கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை துறைமுகத்துக்குள் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை துறைமுக கப்பல் போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியா முழுவதும் அனைத்துத் துறைமுகங்களிலும், வெளிநாட்டுக் கப்பல்கள் மார்ச் 31ம் தேதி வரை நுழைய தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையை அடுத்து, சென்னை துறைமுகத்துக்குள் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை எந்த வெளிநாட்டுக் கப்பலும் நுழைய அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்படுகிறது.

இதனை அனைத்து வர்த்தக நிறுவனங்களும், வணிக நிறுவனர்களும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT