தமிழ்நாடு

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

DIN

இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் பகவான் நந்து (50), இவர் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார்.  

இந்த நிலையில், பகவான் நந்து வழக்கம் போல்  செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள வீட்டுக்கு  இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பகவான் நந்துவின் இரு சக்கர வாகனத்தை மறித்துள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் பகவான் நந்துவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில்,  பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பகவான் நந்து வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT