தமிழ்நாடு

கோழிகள் மூலம் கரோனா பரவுவதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு

DIN

கரோனா வைரஸ் கோழிகள் மூலம் பரவுவதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,

கரோனா வைரஸ் கோழிகள் மூலம் பரவுவதாக வதந்தி பரப்பியவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மோசமான நிலையில் உள்ள கோழிப்பண்ணைத் தொழிலை மீட்டெடுக்க முதல்வர் உதவிடக் கோரி, அவரை நேரடியாக சந்தித்து பேசுவது, கரோனா வதந்தியால் முட்டைத் தொழிலில் இதுவரை ரூ.500 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோழிகள், முட்டைகள் மூலம் கரோனா பரவுவதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT