தமிழ்நாடு

மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதியில்லை

சென்னையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் அனைத்து கடற்கரைகளும் மூடப்படுகின்றன.

DIN

சென்னையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் அனைத்து கடற்கரைகளும் மூடப்படுகின்றன.

கரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள நாட்டு மக்களின் நலன் கருதி சில பாதுகாப்பு நெறிமுறைகளை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளாா். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுய ஊரடங்கை அதாவது மக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்க பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வீடுகளிலேயே இருந்து கைகளைத் தட்டி ஊக்கமளிக்க வேண்டுமென பிரதமா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதன் ஒருபகுதியாக சென்னை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளும் இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடப்படுகின்றன. மேலும் மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல மக்களுககு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT