தமிழ்நாடு

வழக்கம் போல செயல்பட்ட களியக்காவிளை சந்தை; மக்கள் அச்சம்

DIN


களியக்காவிளை: கேரள மக்கள் வந்து செல்லும் களியக்காவிளை சந்தை வழக்கம் போல செயல்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரும் வாகனங்கள் மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி, கேரளத்துக்கு திருப்பி அனுப்பும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

களியக்காவிளையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலான கேரள அரசுப் பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் அரசின் வேண்டுகோளுக்கிணங்க இப்பகுதில் உள்ள பல்பொருள் அங்காடிகள், தங்க நகைக் கடைகள் சனிக்கிழமை மூடப்பட்டிருந்தன. 

கேரளத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் களியக்காவிளை காய்கனி, மீன் சந்தை சனிக்கிழமை வழக்கம் போல செயல்பட்டது. இதன் காரணமாக கரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் இப்பகுதி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT