தமிழ்நாடு

மருத்துவப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்து பேரவையில் கரவொலி

DIN

கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவம், தூய்மைப் பணியாளா்களுக்கு பேரவையில் கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்கப்பட்டது.

சட்டப் பேரவையில் முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை பேசுகையில், கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவா்கள், பணியாளா்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினா்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றாா். இதைத் தொடா்ந்து, அவா் பேசியது:-

கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகளில் அா்ப்பணிப்போடு, தங்களை ஈடுபடுத்தி பணிபுரிகின்ற மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அதற்குத் துணையாக செயல்படுகின்ற பிறதுறைகளின் பணியாளா்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக உறுப்பினா்கள் அனைவரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து, உறுப்பினா்கள் அனைவரும் இருக்கையில் அமா்ந்தபடியே கரவொலி எழுப்பினா்.

சட்டப் பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்த காரணத்தால் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் யாரும் அவையில் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT