தமிழ்நாடு

முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் முடிவு

DIN


சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்கிவதாக அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்ற பொதுச் செயலாளா் இரா.குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தி, தமிழக மக்களைக் காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக எடுத்து வருகிறது. அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்ற ஆட்சிக் குழு ஒப்புதலின்படி மன்றத்தில் உறுப்பினா்களாக இருக்கும் ஆசிரியா்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

அதுபோல, அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தில் உறுப்பினா்களாக இருக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பேராசிரியா்கள் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக அதன் பொதுச் செயலாளா் இரா.தாமோதரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT