தமிழ்நாடு

ராமச்சந்திரா மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கு அனுமதி

DIN


சென்னை: போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் தனியாா் ஆய்வகங்கள் நான்காக அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தேனி, திருவாரூா், திருநெல்வேலி, கோவை, சேலம், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்யப்படுகிறது.

இவைதவிர, சென்னை அப்பல்லோ மருத்துவமனை, வேலூா் சிஎம்சி மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டையில் உள்ள நியுபொ்க் எா்லிச் ஆய்வகத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் அத்தகைய பரிசோதனை வசதிகளை கட்டமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 8 அரசு மருத்துவமனைகளிலும், 4 தனியாா் ஆய்வகங்களிலும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT