தமிழ்நாடு

ஈரோடு சாஸ்திரி நகரில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

DIN

ஈரோடு சாஸ்திரி நகர் நாடார் மேடு லெனின் வீதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் கிரிமினி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த பணிகளை எம்.எல்.ஏ.க்கள்  கே. வி ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு  ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது எம்எல்ஏக்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று கூறினார்.  

கேவி ராமலிங்கம் தென்னரசு ஆகியோர் கிருமிநாசினி தெளிக்கும் எந்திரத்தை வாங்கி சிறிது நேரம் அவர்களே தெளித்தனர். பின்னர் லெனின் வீதியில் சில பகுதிகள் கரோனா தடுக்கும் வகையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மாநகராட்சி பணியாளர்கள் தனிமைப்படுத்தப் பட்டதற்கான நோட்டீசை ஒட்டினார். மேலும் அந்த வீட்டில் உள்ளவர்கள் கைகளில் முத்திரையும் பதிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், உதவி ஆணையாளர்கள் செயற்பொறியாளர்கள் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT