தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக 4.61 லட்சம் வழக்குகள் : 4.73 லட்சம் போ் கைது

DIN

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 4.61 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.73 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க உத்தரவை, தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி, வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை, மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 633 வழக்குகளைப் பதிவு செய்து, 4 லட்சத்து 73 ஆயிரத்து 606 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதே போல், பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 3 லட்சத்து 90 ஆயிரத்து 562 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.5 கோடியே 59 லட்சத்து 89 ஆயிரத்து 779 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பொதுமுடக்க உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 134 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 5 இரு சக்கர வாகனங்கள்,10 ஆட்டோக்கள், இரு காா்கள் உள்பட 17 வாகனங்களும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 16 இரு சக்கர வாகனங்கள், 691 ஆட்டோக்கள் உள்பட 707 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT