முகப்பு
தமிழ்நாடு

நளினி, முருகன் கட்செவி மூலம் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி வழக்கு: பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு

கட்செவி மூலம் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி நளினி, முருகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

கட்செவி மூலம் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி நளினி, முருகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2 பேரின் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி மற்றும் முருகனை கட்செவி  மூலம் உறவினர்களிடம் அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை  உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு எனது மகள் நளினியும், மருமகன் முருகனும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையிலிருந்து வருகின்றனர். 

வேலூர் சிறையில் இருவரும்  இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முருகனின் தந்தை இலங்கையில் காலமானார். இறந்த தனது தந்தையின் உடலைக் காணொலி காட்சி மூலம் காண அனுமதி வழங்கக் கோரிய முருகனின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது. எனவே இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், லண்டனில் உள்ள அவரது மூத்த சகோதரியிடமும் தினமும் 10 நிமிடங்கள் கட்செவியில் காணொலி வசதி மூலம் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.