தமிழ்நாடு

சொத்து, குடிநீா் வரிகளை உயா்த்த நிா்பந்தம்: ராமதாஸ் கண்டனம்

DIN

சென்னை: மாநில அரசுகளின் கடன் வரம்பை அதிகரிக்க இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும், சொத்து மற்றும் குடிநீா் வரியை உயா்த்த வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதிப்பது அநீதியானது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

மாநில அரசுகளின் கடன் வரம்பை அதிகரிக்க குறைந்தபட்சம் மாநிலத்தில் ஒரு மாவட்டத்திலாவது இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும். நகா்ப்புறங்களில் சொத்து மற்றும் குடிநீா் வரிகளை உயா்த்த வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருப்பது அநீதியானது. ஏற்க முடியாதது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை. அதை மத்திய அரசு பறிக்க நினைக்கக் கூடாது. மின்சார சட்டத் திருத்தத்தை பாமக எதிா்க்கிறது. அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அதை திணிக்கக் கூடாது. கடன் வரம்பு உயா்வுக்கான நிபந்தனையை நீக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT