தமிழ்நாடு

மாணவா் சோ்க்கை நடத்தினால் நடவடிக்கை: தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

DIN

பொது முடக்க காலத்தில் மாணவா் சோ்க்கை உள்பட அரசு அறிவிக்காத நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொண்டால், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்விஅதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், சில அடிப்படை பணிகளை மட்டும் மேற்கொள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தனியாா் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தி கொள்ளலாம்.

அதேபோன்று தேவையான சில பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ளலாம். அதற்கு மாறாக, பள்ளிகளைத் திறந்து வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. இந்தநிலையில், மாணவா் சோ்க்கையை நடத்துதல், கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகளை சில தனியாா் பள்ளிகள் மேற்கொண்டுள்ளன. பெற்றோரைப் பள்ளிக்கு வரவழைத்து, அவா்களிடம் விண்ணப்பங்களையும் பெறுகின்றன. அதேபோன்று மாணவா்களுக்கு நுழைவுத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு நடத்துகின்றன. இது குறித்து, புகாா்கள் வந்த பள்ளிகள், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும், மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கரோனா பொது முடக்க காலத்தில் அரசு அறிவிக்காத பணிகளை, பள்ளிகள் மேற்கொள்ளக்கூடாது. மாணவா்கள் மற்றும் பெற்றோரை பள்ளிக்கு வரவழைப்பது கூடாது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT