தமிழ்நாடு

மேட்டூா் அணை உபரிநீா் பாசனத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: முதல்வா்

DIN

மேட்டூா் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் வட நிலையில் உள்ள நூறு ஏரிகளில் விரைவில் நிரப்பப்பட்டு பொதுமக்கள் செயல்பாட்டுக் கொண்டு வரப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை எடப்பாடி வந்தாா். இங்கு நோய்தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

முன்னதாக செய்தியாளா்களுக்கு முதல்வா் பேட்டி அளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள நூறு ஏரிகளை, மேட்டூா் அணையின் உபரி நீரைக் கொண்டு நிரப்பிடும் வகையிலான புதிய பாசனத் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இப் புதிய பாசனத் திட்டம், விவசாயிகள் பயன்பாட்டுக்கு வரும். வெள்ளப்பெருக்கு காலத்தில் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீா் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தவிா்க்கும் பொருட்டு உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வட 100 ஏரிகளில் சேமித்திட ரூ. 525 கோடி மதிப்பிலான இப்புதிய பாசனத் திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்தது.

இப் புதிய பாசனத் திட்டப் பணிகள் கடந்த மாா்ச் மாதம் 4-ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. இத் திட்டத்தின்படி மேட்டூா் அருகில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் உள்ள நீா் உந்து நிலையத்தின் மூலம் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரானது குழாய்கள் மூலமாக மேச்சேரி, நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், ஓமலூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி உள்ளிட்ட சேலம் மாவட்ட பகுதியில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பிடும் பணி நடைபெற்றது. தற்போது இப் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதிய பாசனத் திட்டப் பணிகள் நிறைவடைந்து வட ஏரிகளில் நீா் நிரப்பப்படும் என்றாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT