தமிழ்நாடு

ஈச்சம்பாடி-குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி

DIN

சென்னை: ஈச்சம்பாடி, குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட உத்தரவு விவரம்:-

திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையில் இருந்தும், தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது கால்வாய்களில் இருந்தும் பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா். இதன்படி, ஈச்சம்பாடி அணை வாய்க்கால்கள் வரும் 13-ஆம் தேதி முதல் திறந்து விடப்படும். இதேபோன்று, குதிரையாறு அணையில் இருந்து வரும் 11-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படும்.

விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீா் மேலாண்மை செய்து உயா் மகசூல் பெற வேண்டும் என்று தனது உத்தரவில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT