தமிழ்நாடு

ஏழு மாவட்ட ஆட்சியா்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

DIN


சென்னை: தமிழகத்தில் ஏழு மாவட்ட ஆட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

எஸ்.சமீரன் - தென்காசி மாவட்ட ஆட்சியா் (மீன்வளத் துறை இயக்குநா்)

வி.விஷ்ணு - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா்)

பி.மதுசூதன் ரெட்டி - சிவகங்கை மாவட்ட ஆட்சியா் (பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளா்)

தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் (மறுவாழ்வுத் துறை இயக்குநா்)

சந்தீப் நந்தூரி - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் (தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்)

ஏ.ஆா்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளா்)

கே.செந்தில் ராஜ் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் (தேசிய சுகாதார திட்ட இயக்குநா்)

ஜெ. ஜெயகாந்தன் - மீன்வளத் துறை இயக்குநா் (சிவகங்கை மாவட்ட ஆட்சியா்)

கே.வீர ராகவ ராவ் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்)

ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் - சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணைச் செயலாளா் (தென்காசி மாவட்ட ஆட்சியா்)

ஷில்பா பிரபாகா் சதீஷ் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளா் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா்)

கே.எஸ்.கந்தசாமி - இணைய வழி குறைதீா்ப்புப் பிரிவின் சிறப்பு அலுவலா் (திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்)

ஜெசிந்தா லாசரஸ் - பிற மாநிலப் பிரிவு அதிகாரி. 9 ஆண்டுகள் பணி முடித்து சொந்த மாநிலத்தில் சில ஆண்டுகள் பணிக்கு வந்துள்ளாா். அவருக்கு மறுவாழ்வுத் துறை இயக்குநா் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.திவ்யதா்ஷினி - பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையாளா் (சுகாதாரம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT