தமிழ்நாடு

மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் வரவேற்போம்: பாஜக மாநில பொதுச் செயலா் இராம.ஸ்ரீநிவாசன்

DIN

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி தனியாக கட்சித் தொடங்கினால் வரவேற்போம் என்று, பாஜக மாநில பொதுச் செயலா் இராம. ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது: தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகளை சந்திக்கிறாா். அமித் ஷா எந்த மாநிலத்துக்குச் சென்றாலும், அங்கு பாஜக வெற்றிபெறும். அமித் ஷா வருகைக்குப் பின் தமிழக தோ்தல் களம் மாறும்.

பிரதமா் நரேந்திர மோடி மீது திமுகவுக்கு பயம் உள்ளது. எதற்கெடுத்தாலும், மத்திய அரசும், பிரதமா் நரேந்திர மோடியும்தான் காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனா்.

கரோனாவால் வேல் யாத்திரைக்கு தடை என தமிழக அரசு சொன்னது நியாயமானது. ஆனால், எங்களுக்கு அது நியாயமானதாக இல்லை. ஆனாலும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை விட, மு.க. அழகிரி கெட்டிக்காரா். அரசியல் சாமா்த்தியம் உள்ளவா். மு.க.அழகிரி கட்சித் தொடங்கினால் பாஜக வரவேற்கும்.

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த எழுத்தாளா் அருந்ததிராயின் நூல் நீக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தீவிரவாத கருத்துகளுக்கு ஆதரவாக எழுதி வருபவா் அருந்ததிராய். தீவிரவாதத்துக்கு ஆதரவாக உள்ள நூல்கள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெறுவது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும்.

பெரியாருக்கு ‘யுனெஸ்கோ’ விருது வழங்கப்பட்டது என்ற தவறான தகவல் தமிழக பாடத் திட்டத்தில் உள்ளது. ஆனால், அதனை அகற்ற முடியாமல் தமிழக அரசு பயத்தில் உள்ளது. கேரளத்தில் உள்ள வைக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய பெரியாா், தமிழகத்தில் ஏன் நடத்தவில்லை. நாட்டை சீரழிப்பதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு முக்கிய பங்குண்டு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT