உத்தமபாளையம் புறவழி சாலையில் நடைபெற்ற சாலை மறியல் கலந்துகொண்ட அமமுக கட்சியினர். 
தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் அ.ம.மு.க. சாலை மறியல்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வட்டாட்சியரை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வட்டாட்சியரை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டி ஊராட்சியில் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே கட்சி கொடிக்கம்பம் பிரச்சனை ஏற்பட்டது. இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னிசேர்வைபட்டி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து உத்தமபாளையம் வட்டாட்சியர் உதய ராணி பிரச்னைக்கு உட்பட்ட கட்சி கொடி கம்பத்தை அகற்றி விட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து அமமுக கட்சியினர் உத்தமபாளையம் புறவழி சாலை சந்திப்பில் சாலைமறியல் மேற்கொண்டனர். அப்போது கட்சி கொடி கம்பத்தை அகற்றிய வட்டாட்சியரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியல் மேற்கொண்டவர்களிடம் சமாதானம் செய்ததை தொடர்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் திண்டுக்கல்-குமுளி தேசிய  நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவா் இறப்பில் சந்தேகம்: மனைவி புகாா்

கிராவல் மண் கடத்தல்: 2 போ் கைது

தேநீா் கடை தீப்பிடித்து எரிந்து சேதம்

தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் வைப்பு

SCROLL FOR NEXT