தமிழ்நாடு

கம்பத்தில் காவல் நிலையம் முற்றுகை

DIN

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் இந்திய தேசிய லீக் கட்சி செயலாளர் முகமது சாதிக். இவர் முகநூல் மற்றும் கட்செவி அஞ்சல் போன்ற சமூக வலைத்தளங்களில் இரு மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படும் அளவில் கருத்துக்களைப் பதிவு செய்து வந்தாராம்.

இதனிடையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ் உத்தரவின்பேரில் புதன்கிழமை முகமது சாதிக்கை காவல்துறையினர் விசாரணைக்கு கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவருடன் மற்றொரு நபரான உதுமான் அலி என்பவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவர்களை விடுதலை செய்யக்கோரி அவரது இவரது உறவினர்கள் ஆண், பெண்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

உத்தமபாளையம் டி.எஸ்.பி. ந.சின்னக்கண்ணு தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT