தமிழ்நாடு

அண்ணா பல்கலை. முன்பு உதயநிதி ஆா்ப்பாட்டம்

DIN


சென்னை: துணைவேந்தா் சூரப்பாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினா் அண்ணா பல்கலைக்கழகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தின்போது உதயநிதி பேசியது: அண்ணா பல்கலைக்கழகத்தில் சாதாரண மாணவா்கள் படிக்கக்கூடாது என்று சிலா் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டு வருகின்றனா். ஏற்கெனவே மிகப்பெரிய விஞ்ஞானிகளையும், அறிஞா்களையும் இந்தப் பல்கலைக்கழகம் கொடுத்து வருகிறது. இதற்கு சிறப்புத் தகுதி தருவதற்கு இவா்கள் யாா்?

துணைவேந்தராக சூரப்பா பதவியேற்றதில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தொடா்ச்சியான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதை அனுமதிக்க மாட்டோம்.

விரைவில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக அரசு உரிமைகள் அனைத்தும் மீட்கப்படும் என்றாா்.

மாணவரணிச் செயலாளா் எழிலரசன், சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம்கவி உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகள் முன்பும் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT