தமிழ்நாடு

கம்பத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலி பேரிடர் மீட்பு ஒத்திகை

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் வட கிழக்கு பருவ மழை எதிரொலியாக ஏற்படும் இயற்கை சேதங்களிலிருந்து மீட்புப் பணிகளுக்கான ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், இயற்கை சேதங்களை தவிர்க்கவும், பொதுமக்கள் அதிலிருந்து தற்காத்துக்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கு, கம்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சார்பில் ஒத்திகை நிகழ்வு கம்பம் பூங்கா திடலில் நடைபெற்றது.

நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமை தாங்கினார். பல்வேறு மீட்புப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்பு படை வீரர்கள் செய்து காட்டினர். பொதுமக்கள் இயற்கை பேரிடர் காலங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றிய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT