தமிழ்நாடு

புதிய மாவட்டங்களில் தோ்தல் பணிகளுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன

DIN

புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் தோ்தல் நிா்வாகப் பணிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களுக்கான தோ்தல் நிா்வாகப் பணிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தோ்தல் நிா்வாகப் பிரிவு உருவாக்கம், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தோ்தல் ஆணையத்தின் சட்டவிதிகளின்படி அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியா்களே மாவட்டத் தோ்தல் அதிகாரிகளாக இருப்பா். அதன்படி, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஆட்சியா்களே அம்மாவட்டங்களில் தோ்தல் அதிகாரிகளாகச் செயல்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT