தமிழ்நாடு

தமிழ் இனத்துக்கு எதிராகச் சித்தரிப்பது வேதனையளிக்கிறது: முத்தையா முரளிதரன்

DIN

தமிழ் இனத்துக்கு எதிரானவராக என்னை சித்தரிப்பது வேதனையளிப்பதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

போா் முடிந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009-ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்ற கருத்தைத் தெரிவித்தேன். அப்பாவி மக்களின் படுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்.

சிங்களா்கள், மலையகத் தமிழா்கள், ஈழத் தமிழா்களை ஒன்றாகவே பாா்க்கிறேன்.

நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பாா்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் இந்திய அணியில் இடம்பெற முயன்றிருப்பேன். இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா?

சிலா் அரசியல் காரணத்துக்காக தமிழ் இனத்துக்கு எதிரானவா் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT