தமிழ்நாடு

வானதி சீனிவாசனுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

DIN


பாஜக மகளிரணியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசனுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மகளிரணியின் தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று மாலை (புதன்கிழமை) வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வானதி சீனிவாசனுக்கு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"பாஜக-வின் தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்திலிருந்து வானதி ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் பணி மென்மேலும் சிறந்தோங்கிட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT