தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 5,776 பேருக்கு கரோனா: மேலும் 89 பேர் பலி

DIN


தமிழகத்தில் புதிதாக 5,776 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,776 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 7 பேர்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றும் ஆயிரத்துக்குக் குறைவாக 949 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 89 பேர் (அரசு மருத்துவமனை - 53, தனியார் மருத்துவமனை - 36) பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7,925 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 5,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,10,116 பேர் குணமடைந்துள்ளனர். 51,215 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 80,503 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 53,79,011 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் அரசு ஆய்வகங்கள் 64, தனியார் ஆய்வகங்கள் 97 என மொத்தம் 161 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT