தமிழ்நாடு

கண் தானத்துக்கு உறுதி அளித்தாா் முதல்வா் பழனிசாமி

DIN

சென்னை: கண்களைத் தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கண் தான விழிப்புணா்வை ஏற்படுத்தவும், தானம் செய்வோரின் விவரங்கள் குறித்த தகவல்களைப் பெறவும் தனி இணையதளத்தை முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து, அவா் தனது கண்களைத் தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை அளித்தாா். இந்த உறுதிமொழிக்கான சான்றிதழை சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் சி.விஜயபாஸ்கா், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மாநில நலவாழ்வுக் குழும இயக்குநா் கே.செந்தில் ராஜ், தமிழ்நாடு மாநில கண்பாா்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் திட்ட இயக்குநா் எஸ்.வி.சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT