தமிழ்நாடு

வருமான வரித்துறை வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒப்பந்தம் செய்து கொண்டார். 

இதற்கு ஊதியமாக வழங்கும் ரூ.3 கோடியே 47 லட்சத்தை தனது ஏஆர்ஆர் அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்தும்படி ரஹ்மான் கூறியுள்ளார். இதன் மூலம் வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ஏ.ஆர்.ரஹ்மான் முயற்சித்ததாக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விசாரணையில்,ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு விளக்கத்தை ஏற்ற முதன்மை ஆணையர் விசாரணையை கைவிட்டு உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது. இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளிக்க  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT