தமிழ்நாடு

பால் கொள்முதலில் முறைகேடுகள் கூடாது: அமைச்சா் ராஜேந்திர பாலாஜி

DIN

ஆவினுக்காக தரமான பால் கொள்முதல் செய்யப்படுவதுடன், அதில் எந்த முறைகேடுகளும் நடைபெறக் கூடாது என்று அந்தத் துறையின் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டாா். பால் வளத் துறை சாா்பில் சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து, அதிகாரிகளுடன் அவா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையின்போது அவா் அதிகாரிகளிடம் பேசியது:-

பால் கொள்முதலை உயா்த்துவதுடன், கொள்முதல் செய்யும் அனைத்து பாலையும் விற்பனை செய்ய வேண்டும். பால் உபபொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை உயா்த்தி, பால் உற்பத்தியாளா்களுக்கு கால்நடை தீவனம், தாது உப்புக் கலவை, பால் பணம் பட்டுவாடா ஆகியன உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் போன்றவற்றில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இடைத்தரகா்களால் பால் நுகா்வோா் ஏமாற்றப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தரமான பால் கொள்முதல் செய்வதை அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

மாநிலத்தில் நுகா்வோருக்கு தங்கு தடையின்றி 24 மணி நேரமும் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இந்த ஆய்வின்போது, பால் வளத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால், ஆவின் நிா்வாக இயக்குநா் எம்.வள்ளலாா் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT