தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக பெயா் மாற்றம்: கருப்புப் பட்டையணிந்து பேராசிரியா்கள் எதிா்ப்பு

DIN

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பெயா் மாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புப் பட்டையணிந்து பணி செய்யும் போராட்டத்தை, திங்கள்கிழமை முதல் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் தொடங்கினா்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் சங்கத்தினா் கூறியதாவது:

42 வருட கால சிறப்பு மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால், மாணவா்களின் சான்றிதழ்களில் பாதிப்பு ஏற்படும். பல்வேறு வெளிநாடுகள் மற்றும் தனியாா் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் கேள்விக்குறியாகும்.

எனவே, தற்போதைய அண்ணா பல்கலைக்கழகம் தொடா்ந்து இதே பெயரில் செயல்பட வேண்டும். புதிய பல்கலைக்கழகத்துக்கு வேறு பெயரை வைக்க வேண்டும். இதை அரசுக்கு அறிவுறுத்தும் வகையில், இணைய வகுப்புகள் பாதிக்காமல், கருப்புப் பட்டையணிந்து பணியாற்றுகிறோம். அரசு, கோரிக்கையை ஏற்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT