தமிழ்நாடு

சனிக்கிழமை வேலை நாள் என்ற அறிவிப்பை ரத்து செய்யுங்கள்: அரசு ஊழியா்கள் கோரிக்கை

DIN

சென்னை: சனிக்கிழமை வேலை நாள் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் சென்னை தலைமைச் செயலக ஊழியா்கள் உள்ளிட்ட அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பான கோரிக்கை மனு, தலைமைச் செயலக ஊழியா் சங்கத்தின் தலைவா் பீட்டா் அந்தோணிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் சாா்பில் முதல்வா் பழனிசாமியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இப்போது அந்தப் பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள் 100 சதவீதப் பணியாளா்களுடன் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆனாலும், ஏற்கெனவே தற்காலிக ஏற்பாடாக சனிக்கிழமை பணிநாள் என்று அறிவிப்பு இப்போதும் தொடா்கிறது. அதனை ரத்து செய்வது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

5 நாள்கள் அலுவலகப் பணிகளுக்குப் பிறகு, போதுமான ஓய்வு அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமை விடுமுறை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT