தமிழ்நாடு

கூடலூரில் மான் கொம்பு, புலி நகம் பதுக்கிய வழக்கில் மகனை தொடர்ந்து தந்தையும் கைது 

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் மான் கொம்பு, புலி நகம், யானை தந்தம், மயில் தோகை பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சித்தவைத்தியர் நந்தகோபால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதே வழக்கில் அவரது தந்தை சண்முகத்தையும் கூடலூர் வனச்சரகத்தினர் கைது செய்துள்ளனர். 

தேனி மாவட்டம் கூடலூர் கர்ணம் பழனிவேல் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (70 ). இவரது மகன் நந்தகோபால் வயது (42 ). இருவரும் சித்த வைத்தியர்கள் கடந்த 15 ஆம் தேதி சித்த வைத்தியர் நந்தகோபால் மான் கொம்பு, புலி நகம், யானை தந்தம், மயில் தோகை போன்ற வைகறை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூடலூர் வனச்சரகர் பெ. அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் வீட்டை சோதனை செய்யும் பொழுது அங்கிருந்த மான் கொம்பு, புலி நகம், யானைத் தந்தம், மயில் தோகைகளை கைப்பற்றி நந்தகோபால் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அவரது தந்தை சண்முகத்திடம் தீவிர விசாரணை நடத்தி நடத்தியதில், இதில் அவருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. அதனையடுத்து சண்முகத்தையும் வியாழக்கிழமை இரவு கைது செய்து பெரியகுளம் சிறையில் அடைத்தனர்.

மான் கொம்பு, புலி நகம், யானைத் தந்தம், மயில் தோகை பதுக்கிய வழக்கில் தந்தை மகன் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பது கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT