தமிழ்நாடு

குமாரபாளையம்: பராமரிப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஊழியர் பலி

DIN

குமாரபாளையம்: குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் தவறி விழுந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி புள்ளாக்கவுண்டன்பட்டி அருகேயுள்ள கொடாரபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குருநாதன் (42). இவர், எதிர்மேடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம்,  குமாரபாளையம் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை வழக்கமான பராமரிப்பு பணியில் குருநாதன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மின்மாற்றியில் சீரமைப்பு பணி மேற்கொண்ட குருநாதன் கம்பத்திலிருந்து கீழே இறங்கும்போது கை தவறி கீழே விழுந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட குருநாதன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT