தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

DIN


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.99அடியாகச் சரிவடைந்தது. 

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. 

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 4,427 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 20,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 850 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை காலை 99.12 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 97.99 அடியாக சரிவடைந்தது. அணையின் நீர் இருப்பு 62.26 டி.எம்.சி.யாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT