முகப்பு
தமிழ்நாடு

அனைத்து வேலைகள், படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ்

அனைத்து வேலைகள், படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 1 ஜனவரி 2021, 5:12 pm IST
ராமதாஸ்.
பகிர்:

அனைத்து வேலைகள், படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் துணை நிறுவனங்களில் அறிவியலாளர் பணியிடங்களுக்கான ஆள் தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது. உயர்நிலை அறிவியலாளர் பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்கள், உயர் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றில் தகுதிக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறி, இட ஒதுக்கீட்டை முடக்கும் சதித் திட்டங்கள் அண்மைக்காலமாக தீட்டப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாகத் தான் அண்மையில் ஐஐடிகள் எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று இராம்கோபால் ராவ் குழு பரிந்துரைத்து இருந்தது. அடுத்ததாக இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவின் அறிவியலாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுக்கு படிப்படியாக முடிவு கட்டும் இத்தகைய சதி முறியடிக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதியும், திறமையும் பின்னுக்குத் தள்ளப்படுவதாக கூறப்படுவதே சமூகநீதிக்கு எதிரான சதியாகும். இட ஒதுக்கீடு எந்த வகையிலும் தகுதியை பாதிப்பதில்லை என்பது பல்வேறு தருணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சில நிறுவனங்களை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பது என்ற கொள்கை திருத்தப்பட வேண்டும். மத்திய அரசின் அனைத்து நிறுவன வேலைவாய்ப்புகளிலும், மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவங்களிலும் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு முழுமையான இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; அதன் மூலம் சமூகநீதியை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments