சமூக சேவகர் விருது அளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை கிளை ரெட் கிராஸ் தலைவர் தேவராசு, துணைத் தலைவர் ராஜா, சமுக ஆர்வலர் சசி என்கிற கோமதி, உதவி தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் ராமமூர்த்தி, விஜயகுமார், அந்தோணிசாமி,அன்பு, கிருஷ்ணமூர்த்தி, முனுசாமி, உத்திரகுமார், இராமு, சிதம்பரம், மணிகண்டன், சமுத்திரன், சீனிவாசன் ஆகியோரை பாராட்டி சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
நோய் தொற்று காலத்தில் கிருமிநாசினி அடித்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், இல்லாதோர்க்கு உணவு வழங்குதல், உள்பட பல்வேறு பணிகளை செய்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.