முகப்பு
இந்தியா

தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு: வைகோ அறிவிப்பு!

இடைத்தேர்தலில் தவெகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று அதன் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜூன் 2026, 5:08 pm IST
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - முதல்வர் விஜய் - கோப்புப்படம்
பகிர்:

இடைத்தேர்தலில் தவெகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று அதன் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதிமுகவின் 32ஆவது பொதுக்குழு இன்று நடைபெற்றது. இதுவரை நடந்த பொதுக்குழுவிலேயே சிறப்பு வாய்ந்த பொதுக்குழுவாக அமைந்திருக்கிறது. தேர்தல் முடிவின்போது அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு என தகவல் வெளியானது.

இது உண்மையாக இருந்திருந்தால் அரசியல் மோசடி. எனவே, திமுகவுடன் தோழமையில் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தோம். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக உடன் தோழமை ஏற்படும் வகையில் நம் நடவடிக்கை அமையும்.

Advertisement

Advertisement

முதல்வர் விஜய்யிடம் நான் ரூ.50 கோடி வாங்கியதாக அபாண்டமாக பொய் பரப்புகிறார்கள். இந்த பொய் குற்றச்சாட்டு மீது வழக்கு தொடர உள்ளேன். கட்சிக்காக சொத்துகளை விற்றவன் நான். முன்பு ஜெயலலிதாவிடம் கோடிகோடியாக பணம் வாங்கியதாக பொய் பரப்பினார்கள். திமுக மீது விமர்சனம் வைத்தது இல்லை.

திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன். சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை. இனி திமுகவுடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என முடிவுக்கு வந்துள்ளது மதிமுக. என் நேர்மை, நாணயம் எனக்கு தெரியும். பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடித்து வருகிறேன். கட்சிக்காக சொத்துகளை விற்றவன் நான். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

summary

MDMK General Secretary Vaiko has stated that the MDMK will extend its support to TVK in the by-election.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments