முகப்பு
தமிழ்நாடு

ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதன்மைச் செயலாளா்களாக பதவி உயா்வு

தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேருக்கு முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி 2021, 6:08 am IST
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் (கோப்புப்படம்)
பகிர்:

தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேருக்கு முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை மேற்கோள் காட்டி இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

1997-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு போ், முதன்மைச் செயலாளா் அந்தஸ்துக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளனா். வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளா் டி.காா்த்திகேயன், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா, தில்லி தமிழ்நாடு இல்ல உறைவிட முதன்மை ஆணையா் ஆஷிஷ் வச்சானி, மின்வாரியத் தலைவா் பங்கஜ் குமாா் பன்சால், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் (பயிற்சி) ஹா் சகாய் மீனா, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் ஆகியோருக்கு முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments