முகப்பு
தமிழ்நாடு

மம்தா பானர்ஜி பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி 2021, 4:10 pm IST
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பகிர்:

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தன் பிறந்தநாளை செவ்வாயன்று கொண்டாடுகிறார்.

அதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மாண்புமிகு. மம்தா பானர்ஜி அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு தங்களின் சேவையும் பங்களிப்பும் பாராட்டிற்குரியது.

தங்கள் வாழ்வில் நல்ல உடல்நலனும், வெற்றிகளும் அடைய வாழ்த்துகிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.