முகப்பு
தமிழ்நாடு

சென்னை அரசு மருத்துவமனைகளில் ஹர்ஷ் வர்தன் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:48 am IST
சென்னை அரசு மருத்துவமனைகளில் ஹர்ஷ் வர்தன் ஆய்வு
பகிர்:

சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்தார்.

பின்னர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார். அப்போது மருத்துவப் பணியாளர்களிடமும் ஹர்ஷ் வர்தன் உரையாடினார். 

Advertisement

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ''மிகக் குறுகிய காலத்தில் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா தயாரித்துள்ளது. அடுத்த சில நாள்களில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்.

முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்படும்.

கரோனா குறித்த தகவல்கள் வெளிப்படையாக தேசிய அளவிலும், உள்ளூர் மட்ட அளவிலும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து நடைபெறும். மேலும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படும்'' என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments